வள்ளியூர், அக். 8: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 9) அடையாள உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.
இக் கோரிக்கையை வலியுறுத்தி அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து தமிழக முதல்வருடன் கடந்த மாதம் 21-ம் தேதி போராட்டக் குழுவினர் பேச்சு நடத்தினர்.
மக்களின் அச்சத்தைப் போக்கும்வரை கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து, உண்ணாவிரதம் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. எனினும் அக்டோபர் 9-ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர்.
இதனிடையே, பிரதமரை சந்திக்க போராட்டக் குழுவினரை தமிழக அரசு அழைத்துச் சென்றது. பிரதமரைச் சந்தித்த பின்னர் அணுமின் நிலையம் தொடர்பாக அப் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார்.
அதேநேரம், அவர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க தமிழக அரசு ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டிருந்தார். இதையடுத்து, பிரதமருடன் நடத்திய பேச்சு திருப்தி அளிக்கவில்லை என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இடிந்தகரையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அணுசக்தி எதிப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அக் கோரிக்கையை அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்கின்றனர். எங்களுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசு மக்கள் உணர்வுகளைப் புரிந்து உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த அடையாள உண்ணாவிரதம்
பிரதமரைச் சந்தித்துப் பேசிய கருத்துகளை உண்ணாவிரதத்தில் தெரியப்படுத்துவோம். பின்னர் மக்கள் என்ன முடிவு எடுப்பார்களோ அதன்படிதான் போராட்டத்தைத் தொடருவதா, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் நில அபகரிப்பு மீதான தடை நீக்க உத்தரவு! சிபிஐ(எம்) வரவேற்பு!

ஜோ ரூட், லியம் டாஸன் அரைசதம்; இந்தியாவுக்கு 259 ரன்கள் இலக்கு!

ரியோ நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் - 2?

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy


