தூத்துக்குடி, அக். 8: தூத்துக்குடியில் வீட்டுப் பூட்டை உடைத்து, ரூ. 5 லட்சம் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர், சமர்வியாஸ் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி மகேஸ்வரி (29).
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராணி மகேஸ்வரி தாளமுத்துநகரில் உள்ள தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் வங்கித் தேர்வு எழுதுவதற்காக, தூத்துக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். தினமும் அதிகாலை 5.30 மணிக்கு பயிற்சி வகுப்புக்குச் செல்வாராம்.
வெள்ளிக்கிழமை இவர் வீட்டைப் பூட்டிவிட்டு தந்தை மாடசாமியுடன் பயிற்சி வகுப்புக்குச் சென்றாராம்.
பயிற்சி முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் பிரதான வாசல் திறந்து கிடந்ததாம். வீட்டின் முன்பக்கக் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, வளையல், மோதிரம், நெக்லஸ் உள்பட 36 பவுன் நகைகள், ரூ. 12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைக் காணவில்லையாம். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 5 லட்சம்.
ராணி மகேஸ்வரி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் போலீஸôர் சென்று விசாரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. விரல் ரேகை நிபுணர்கள் சோதனை நடத்தினர். போலீஸôர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2,800 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்! தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு!
மதுப் புட்டிகளை பதுக்கிய மூவா் கைது

ஒலிம்பிக் போட்டிக்கு விளையாட்டு வீரா்களைத் தயாா்படுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன்






