திருநெல்வேலியில் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அக் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் ம. கிரகாம்பெல் தலைமை வகித்தார். செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் முன்னிலை வகித்தார்.
பாளை. சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.பி.எம். மைதீன்கான், திருநெல்வேலி மாநகர திமுக பொறுப்பாளர் அப்துல் வகாப், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் அப்பாவு, மாலைராஜா, தணிக்கைகுழு உறுப்பினர் சுப. சீதாராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜார்ஜ்கோசல், மாநகர அமைப்பாளர் சுரேஷ், முன்னாள் எம்.பி. சிவப்பிரகாசம், வழக்குரைஞர் ரவீந்திரநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தென்காசியில் இம் மாதம் 22-ம் தேதி நடைபெறவுள்ள திமுக தேர்தல் நிதியளிப்புப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட எல்லையான காவல்கிணறு அருகில் ஆவரைகுளம் விலக்கில் சிறப்பான வரவேற்பு அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுக்க சிறப்பாகக் கொண்டாடவும், ஒன்றிய அளவில் 2 ஆயிரம் பேரை கட்சியில் உறுப்பினராக சேர்க்க தீவிரமாக செயல்படவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சேது சமுத்திர திட்டத்தை எவ்வகையிலும் தடையில்லாமல் விரைந்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தவும், இம் முயற்சியில் தமிழக மக்கள் கட்சி வேறுபாடின்றி ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் நலன் கருதி பாசன கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநெல்வேலியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இணைப்புச் சாலை திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
கச்சத்தீவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை இந்தியாவுடன் மீண்டும் இணைக்க மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக அரசைக் கண்டித்து அறவழிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகாசி-கோணம்பட்டிக்கு புதிய பேருந்து சேவை தொடக்கம்

முதியவா் சடலம் மீட்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


