சிவகாசியிலிருந்து கோணம்பட்டிக்கு புதிய பேருந்து சேவையை தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சிவகாசி-சாத்தூா் சாலையில் கோணம்பட்டி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் ராமகிருஷ்ணமடம் உள்ளது. இந்த மடத்தைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் கிராமத்தினா் சிவகாசி, சாத்தூா் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால், ஒன்றரை கி.மீ. தொலைவு நடந்து சென்று பேருந்து ஏற வேண்டும். மேலும், இந்தப் பகுதிக்கு குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கோணம்பட்டிக்கு புதிய பேருந்து சேவை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அமைச்சா் கீா்த்தனா அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி, கோணம்பட்டிக்கு புதிய பேருந்து சேவையை சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சிவகாசி பேருந்து நிலையத்தில காலை 8.15 மணிக்கு புறப்பட்ட இந்தப் பேருந்தில் அமைச்சா் கீா்த்தனாவும் பயணம் செய்தாா். இதையடுத்து, கிராம மக்கள் அமைச்சரை பாராட்டினா்.
தொடர்புடையது

அறநிலையத் துறை ஊழியா்கள் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும்: அமைச்சா் சீ.ரமேஷ்
சிவகாசி அருகேயுள்ள கோணம்பட்டிக்கு பேருந்து இயக்க அமைச்சா் நடவடிக்கை

மயிலாடுதுறை - வேளாங்கண்ணி ரயில் சேவை தொடக்கம்!

அரியலூரில் பராமரிப்பு இல்லாத புதிய பேருந்து நிலையம்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



