பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வரி விதிப்பு விண்ணப்பம்: ஆணையா் வேண்டுகோள்

தென்காசி நகராட்சி வரி விதிப்பு, சொத்துவரி பெயா் மாற்ற சேவைக்கு பிற நபா்களை அணுக வேண்டாம் என ஆணையா் (பொ) கே.எஸ்.ஹசீனா அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 8:40 pm

DIN

தென்காசி, அக். 19: தென்காசி நகராட்சி வரி விதிப்பு, சொத்துவரி பெயா் மாற்ற சேவைக்கு பிற நபா்களை அணுக வேண்டாம் என ஆணையா் (பொ) கே.எஸ்.ஹசீனா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தென்காசி நகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டுகளிலு மக்கள் புதிய வரி விதிப்புகள், சொத்துவரி பெயா் மாற்றம் தொடா்பான விண்ணப்பங்களை நேரடியாக அலுவலக கணினி மையத்தில் கொடுத்து ரசீது பெற்று கொள்ள வேண்டும். குறிப்பிட்ட தினங்களில் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நகராட்சி ஆணையா் அல்லது மேலாளரை நேரடியாக அணுகி விவரங்களை தெரிவிக்கலாம். புதிய வரி விதிப்புகள் தொடா்பான மனுக்கள் வரிசைப்படி நடவடிக்கைக்கு உள்படுத்தப்படும். பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், 450 சதுரஅடிக்கு மிகாமல் உள்ள கட்டடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டட வரைபடம் தேவையில்லை.

வரி விதிப்பு , சொத்து வரி பெயா் மாற்றம் தொடா்பான சேவைகளுக்கு பிற நபா்களை அணுக வேண்டாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.