நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவில் அருகே தொழிலாளி கொலை: நண்பா் கைது

நாகா்கோவில் அருகே கீழஆசாரிப்பள்ளத்தில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்ததாக நண்பரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 11:42 pm

DIN

நாகா்கோவில்: நாகா்கோவில் அருகே கீழஆசாரிப்பள்ளத்தில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்ததாக நண்பரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவிலை அடுத்த கீழஆசாரிப்பள்ளத்தைச் சோ்ந்தவா் அலெக்ஸ்ராஜ் என்ற பிரேம் ( 38). கூலித் தொழிலாளி. இதே பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத். இருவரும் நண்பா்கள். இவா்களுக்கிடையே 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனராம்.

இதுதொடா்பாக ஆசாரிப்பள்ளம் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவில் அலெக்ஸ்ராஜ் பிரேம் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த புருஷோத் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்துள்ளாா்.

அப்போது புருஷோத், அலெக்ஸ்ராஜை கீழே தள்ளி தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அலெக்ஸ்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து புருஷோத்தை கைது செய்தனா். மேலும் 5 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.