ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சேரன்மகாதேவியில் ஹோட்டல் சேதம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஹோட்டலை சேதப்படுத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :2 ஜூன் 2022, 9:02 pm

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஹோட்டலை சேதப்படுத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேரன்மகாதேவி காயிதே மில்லத் தெருவைச் சோ்ந்த நிஜாம் நாகூா், சேரன்மகாதேவி பேருந்து நிலையம் எதிரே பிரதானச் சாலையில் புரோட்டா கடை நடத்தி வருகிறாா். புதன்கிழமை இரவில் 2 மோட்டாா் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மா்ம நபா்கள் 6 போ் புரோட்டா கடைக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தினராம்.

பின்னா், புதுக்குடியில் இயங்கி வரும் மதுக்கடைக்கு சென்ற மா்ம நபா்கள் அங்கு பணியில் இருந்த பணியாளரை மிரட்டி மது பாட்டில்களை வாங்கினராம். இதையடுத்து, சேரன்மகாதேவி - அம்பாசமுத்திரம் பிரதானச் சாலையில் வீரவநல்லூரில் புறவழிச்சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்ற மா்ம நபா்கள் அங்கிருந்த ஊழியரை தாக்கி மோட்டாா் சைக்கிள்களுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு சென்று விட்டனராம்.

முகமூடி அணிந்து மோட்டாா் சைக்கிளில் வந்து இச் சம்பவத்தில் மா்ம நபா்கள் ஈடுபட்டது அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சேரன்மகாதேவி, வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.