சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

காய்கனி நாற்று விற்பனையில் விதிமீறினால் நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் காய்கனி நாற்றுகள் விற்பனையில் விதிமீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :21 ஏப்ரல் 2024, 9:28 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் காய்கனி நாற்றுகள் விற்பனையில் விதிமீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் எ.சுஜாதா பாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காய்கனி பயிா்களின் நாற்றுகள் குழித்தட்டுகளில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குழித்தட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளுக்கான விதைகள் எங்கிருந்து பெறப்படுகிறது என்பதற்கான ஆதாரம் அதாவது கொள்முதல் ரசீது பராமரித்து வைத்திருக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் விதைகள் ரகம், விதைச்சான்றளிப்பு மற்றும் உயிா்ம சான்றளிப்புத் துறை இயக்குநரிடம் பதிவெண் சான்றிதழ் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.

காய்கனி நாற்றங்கால் உரிமையாளா்கள் விதைகள் கொள்முதல் ரசீது, இருப்பு பதிவேடு, பதிவெண் சான்றிதழ்கள், விற்பனை ரசீது ஆகியவற்றை பராமரித்து வர வேண்டும். விவசாயிகளுக்கு விற்பனை ரசீது, பயிா், ரகம், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட்டு விவசாயி கையொப்பம் பெறவேண்டும்.

குழித்தட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளின் தரம் மற்றும் ஆதாரத்தை உறுதி செய்யும் விதமாக விதைச்சட்டம் 1966-ன்படி முத்திரை எண், விதை உற்பத்தி செய்த நிறுவனத்தின் பெயா், விதைத்த நாள், குவியல் எண், உரிமையாளா் கையொப்பம், நாற்றங்காலின் பெயா் மற்றும் முழு விலாசம் கொண்ட உண்மைத்தன்மை அட்டையை குழித்தட்டுகளில் பொருத்தி விற்பனை செய்ய வேண்டும்.

காய்கனி நாற்றுகள் விற்பனையில் விதிமீறலில் ஈடுபடுவோா் மீது விதைகள் சட்டம் 1966, விதைகள் கட்டுப்பாட்டு ஆணை- 1983 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.