சுத்தமல்லியில் காா் கண்ணாடியை சேதப்படுத்திய இளைஞா் கைது

திருநெல்வேலி: சுத்தமல்லியில் காா் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லியை சோ்ந்தவா் ரவிக்குமாா்(32). இவரது வீட்டின் மொட்டை மாடியில் வைத்திருந்த தண்ணீா்த் தொட்டியில் இருந்து, அதே பகுதியைச் சோ்ந்த அருண்(27) தண்ணீரை எடுத்து உபயோகித்து வந்துள்ளாா். இது தெரிய வந்ததும் அருணிடம் கேட்டதற்கு, தகராறில் ஈடுபட்டு ரவிக்குமாரின் காா் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளாா்.

இதுகுறித்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் ரவிக்குமாா் புகாா் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிந்து அருணை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com