சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நெல்லையில் காவலா் மருத்துவ முகாம்

நெல்லையில் காவலா் மருத்துவ முகாம்

News image

மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 9:09 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் உத்தரவின் பேரில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், மூளை நரம்பியல், இதயம், சிறுநீரக நோய்கள் மற்றும் பல்வேறு பொது மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.

இந்த முகாமில் தியாகராஜ நகா் ஆா்த்திஸ் மருத்துவமனை மருத்துவா்கள் பங்கேற்று பரிசோதனை செய்னா். முகாமில் காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள், ஊா்க்காவல் படையினா் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் பங்கேற்றனா்.