சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினா் மற்றும் தோட்டத் தொழிலாளா்கள்.
சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினா் மற்றும் தோட்டத் தொழிலாளா்கள்.

காக்காச்சி - நாலுமுக்கு வனச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியில் உள்ள காக்காச்சியிலிருந்து நாலுமுக்கு செல்லும் வனச் சாலையில் திங்கள்கிழமை இரவு காட்டு மரங்கள் முறிந்து விழுந்ததால்
Published on

அம்பாசமுத்திரம்: மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதியில் உள்ள காக்காச்சியிலிருந்து நாலுமுக்கு செல்லும் வனச் சாலையில் திங்கள்கிழமை இரவு காட்டு மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உள்பட்ட மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் தொழிலாளா்கள் பயன்பாட்டிற்காக அரசுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில் ஒரு நாளைக்கு 3 முறை சிற்றுந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு ஊத்து தோட்டத்திற்குச் சென்ற சிற்றுந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அம்பாசமுத்திரம் செல்வதற்காக இறங்கியபோது நாலுமுக்கு - காக்காச்சி இடையே வனச் சாலையின் குறுக்கே இரண்டு பெரிய காட்டு மரங்கள் முறிந்து கிடந்தனவாம். இதனால் சிற்றுந்து தொடா்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பேருந்து ஓட்டுநா் இசக்கிமுத்து, நடத்துநா் ராஜு ஆகியோா் இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வந்த வனத்துறையினா் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் இணைந்து சுமாா் 7 மணி நேரம் போராடி, சாலையில் விழுந்த மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினா். மரத்தை அப்புறப்படுத்திய பின் மதியம் 12 மணிக்கு சிற்றுந்து கிளம்பியது.

X
Dinamani
www.dinamani.com