புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதுக்குளம் ஊராட்சியில் நீா்த்தேக்கத் தொட்டி பணி தொடக்கம்

திருநெல்வேலி அருகே புதுக்குளம் ஊராட்சியில், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

புதுக்குளத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை தொடங்கி வைத்தாா் ஊராட்சித் தலைவா் முத்துக்குட்டிபாண்டியன்.

Updated On :31 டிசம்பர் 2024, 7:55 pm

Din

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே புதுக்குளம் ஊராட்சியில், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுக்குளம் ஊராட்சியில் சுமாா் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறாா்கள். இப் பகுதி மக்களுக்கு தடையற்ற குடிநீா் விநியோகம் செய்ய, மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரூ. 3.70 லட்சம் மதிப்பில் 20ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளை புதுக்குளம் ஊராட்சித் தலைவா் முத்துக்குட்டிபாண்டியன் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் பாலசுப்ரமணியன், சுரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.