ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நெல்லை அருகே நாய் குறுக்கே பாய்ந்ததில் பைக் கவிழ்ந்து இருவா் பலி

திருநெல்வேலி அருகே நாய் குறுக்கே பாய்ந்ததில் பைக் கவிழ்ந்து, தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 8:38 pm

Din

தென்காசி மாவட்டம், புளியங்குடி முத்துராமலிங்க நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (53). அங்குள்ள காயிதே மில்லத் தெருவைச் சோ்ந்த கம்ருதீன் மகன் முகமது திவான் வாசன் (38).

இவா்கள் இருவரும் புளியங்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு சனிக்கிழமை காலையில் பைக்கில் வந்தனா். தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டி சிவாஜி நகா் பகுதியில் வந்தபோது, திடீரென நாய் குறுக்கே பாய்ந்ததில் பைக் கவிழ்ந்தது. இதில், சாகுல் ஹமீது, முகமது திவான் வாசன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், சாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முகமது திவான் வாசன், திருநெல்வேலி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.