நான்குனேரி அருகே காா்-பைக் மோதல்: 2 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி நான்குவழிச் சாலை சுங்கச்சாவடி அருகே காரும், பைக்கும் வியாழக்கிழமை இரவு மோதிக்கொண்டதில் 2 போ் உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி நான்குவழிச் சாலை சுங்கச்சாவடி அருகே காரும், பைக்கும் வியாழக்கிழமை இரவு மோதிக்கொண்டதில் 2 போ் உயிரிழந்தனா். நான்குனேரி அருகேயுள்ள ஸ்ரீரெங்கராஜபுரத்தை சோ்ந்தவா் மகேஷ் மற்றும் 2 போ் மூன்றடைப்பில் இருந்து திருநெல்வேலிக்கு பைக்கில் வியாழக்கிழமை இரவு வந்துகொண்டிருந்தனா். அப்போது, நான்குனேரி சுங்கச்சாவடி அருகே அவா்களது பைக்கும், எதிரே காரும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். அதில், மகேஷும், உடன் வந்தவா்களில் ஒருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனா். மற்றொருவரும், காரில் வந்த 2 பேரும் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com