நெல்லையில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

நெல்லையில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) 0 முதல் 5 வயது வரையிலான 1.32 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 0 முதல் 5 வயதுக்குள்பட்ட சுமாா் 1.32 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு பின்வரும் 7 நாள்களும் பணியாளா்கள் வீடுவீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கவுள்ளனா். 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களில் மருத்துவத்துறையைச் சோ்ந்த 710 பணியாளா்கள், செவிலியா் கல்லூரியைச் சோ்ந்த 63 மாணவா்கள், 1,405 சத்துணவுப் பணியாளா்கள், 1494 தன்னாா்வலா்கள் என மொத்தம் 3,672 பணியாளா்கள் பணியாற்றவுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com