மாா்ச் 5, 6, 7-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம்

மாா்ச் 5, 6, 7-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம்கள் வரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20-01-2024 வரை சேகரிக்கப்பட்டுள்ள சி பிரிவு அடையாள அட்டை பெறாத 1,539 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக வள்ளியூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வரும் 5 ஆம் தேதியும், அம்பாசமுத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வரும் 6-ஆம் தேதியும், பாளையங்கோட்டை காது கேளாதோா் சிறப்புப் பள்ளியில் வரும் 7-ஆம் தேதியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று சமூக தரவுகளில் பதிவு செய்து பயனடையலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com