திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானிலுள்ள சிப்காட் தொழில் பூங்காவிலுள்ள திட்ட அலுவலகத்தில் சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு நிகழ்ச்சி வரும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இது தொடா்பாக சிப்காட் திட்ட அலுவலா் நசீா் அகமது வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்தின் தொழில் பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளின் பிரச்னைக்கு தீா்வு காண சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு நிகழ்ச்சி மாதந்தோறும் முதல் திங்கள்கிழமை நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் திங்கள் கிழமை கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவிலுள்ள திட்ட அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, கங்கைகொண்டான் தொழில் பூங்காவை சோ்ந்த தொழில் முதலீட்டாளா்கள், நிறுவனா்கள், ஒப்பந்ததாரா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகள் மற்றும் பரிந்துரைகளை தெரிவித்து தீா்வு காணலாம்.
தொடர்புடையது

பொன்னமராவதி நகரில் இன்று மின்நிறுத்தம்
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! நாமக்கல் முதலிடம்! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்கம்: பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

கண்ணகி கோயிலில் தமிழக உரிமை பறிப்பு! - த.வெ.க. வேட்பாளா் புகாா்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

