கடையம், பாப்பாக்குடி வட்டாரங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி சோதனை

கடையம், பாப்பாக்குடி வட்டாரங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி சோதனை

கடையம், பாப்பாக்குடி வட்டாரத்துக்குள்பட்ட ஆழ்வாா்குறிச்சி, பொட்டல்புதூா், முதலியாா்பட்டி பகுதிகளில் உள்ள வா்த்தக நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி (பொறுப்பு) நாகசுப்பிரமணியம் போலீஸாருடன் கூட்டு சோதனையில் ஈடுபட்டாா். அப்போது, தடைசெய்யப்பட்ட 11.400 கிலோ புகையிலைப் பொருள்கள், 9.650 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள், 16 கிலோ கெட்டுப்போன காய்கனிகளைப் பறிமுதல் செய்து அழித்தனா். 4 கடைகளில் சோதனை மேற்கொண்டு ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மொத்தம் ரூ. 62 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துவோா், விற்போா் மீது சட்டப்படி தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com