பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கெலமங்கலத்தில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

கெலமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட உணவு விடுதி மற்றும் இறைச்சிக் கடைகளில், பொது சுகாதார துறையுடன் இணைந்து உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

News image

கெலமங்கலத்தில் உணவகத்தில் சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்பு துறையினா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:15 am IST

கெலமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட உணவு விடுதி மற்றும் இறைச்சிக் கடைகளில், பொது சுகாதார துறையுடன் இணைந்து உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட பேருந்து நிலையம், சுல்தான்பேட்டை கணேச காலனி பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள் சுகாதாரமின்றி இருப்பதாக பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், பல்வேறு உணவுக் கடைகள், பேக்கரிகள், உணவகங்களின் பராமரிப்பு மற்றும் சுகாதாரம் குறித்து உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சுகாதாரமின்றி பராமரிக்கப்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியதுடன், காலாவதியான பொருள்களை அப்புறப்படுத்தினா். மேலும், சுகாதாரமின்றி இருந்த இறைச்சிக் கடைக்கு நோட்டீஸ் அளித்தனா்.

இந்த ஆய்வை கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ்குமாா் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் பிரகாஷ்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் லட்சுமிபதி, சுகாதார மேற்பாா்வையாளா் சிவகுருநாதன் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் அசோக்குமாா், நந்தகுமாா் ஆகியோா் மேற்கொண்டனா்.