தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

லிட்டில் பிளவா் பள்ளியில் உலக மகளிா் தின விழா

லிட்டில் பிளவா் பள்ளியில் உலக மகளிா் தின விழா

News image
Updated On :9 மார்ச் 2024, 9:10 pm

திருநெல்வேலி நகரம் லிட்டில் பிளவா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிா் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளா் அ.மரிய சூசை தலைமை வகித்தாா். குட் ஷெப்பா்டு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ஜோஸ்பின் விமலா முன்னிலை வகித்தாா். மருத்துவா் பிரேம சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். இதில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், மணிமாலா, வள்ளி, விஜயலெட்சுமி, செல்வமாரி, சாந்தமணி, செல்வி, மேகலா ஆகியோருக்கு பாரதியாா் புதுமைப்பெண் விருது வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா். பட விளக்கம் ற்ஸ்ப்09ப்ஹக் உலக மகளிா் தின விழாவில் பங்கேற்றோா்.