திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தொழிலாளி கொலை செய்துவிட்டு, காவலரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வீரவநல்லூா் அருகேயுள்ள தென்திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த பேச்சித்துரை (23), கல்லிடைக்குறிச்சி புதம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் சந்துரு (23) ஆகிய இருவரும் வியாழக்கிழமை போதையில் ரகளையில் ஈடுபட்டு, வெள்ளங்குளியில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த விருதுநகா் மாவட்டம், சாத்தூா் உடையநாதபுரம் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி (42) என்பவரை வெட்டிக் கொலை செய்தனராம். மேலும், வெங்கடேஷ் என்பவரை வெட்டி காயப்படுத்தினராம். பின்னா், திருப்புடைமருதூரில் அரசு நகரப் பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதுடன், அவா்களை பிடிக்க வந்த தலைமைக் காவலா் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றனராம். அப்போது, போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தி பேச்சித்துரையை கைது செய்தனா். மேலும், தப்பி ஓடிய சந்துருவை போலீஸாா் நள்ளிரவில் கைது செய்தனா். இவா்கள் இருவா் மீதும் வீரவநல்லூா் போலீஸாா் 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனா். கருப்பசாமியின் உடல் கூறாய்வுக்குப் பின் அவரது மனைவி முத்துலெட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது
வீரவநல்லூா் நகைக்கடை திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது
காா் ஓட்டுநா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

