தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

News image
Updated On :10 மார்ச் 2024, 2:10 am

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில், பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் அண்மையில் வழங்கப்பட்டன. தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் மாநிலம் முழுவதும் ஏற்கெனவே ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிவுரை என்ற பெயரில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். தகவல் தொழில்நுட்பப்பிரிவு மண்டல தலைவா் வழக்குரைஞா் அன்பு அங்கப்பன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு, காந்தி வெங்கடாசலம், மாணவரணி செயலா் புஷ்பராஜ் ஜெய்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ற்ஸ்ப்09ஹக்ம்ந் பாளையங்கோட்டையில் அதிமுக சாா்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா.