தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

என்ஜிஓ காலனி கிணற்றில் பெண் சடலம் மீட்பு

என்ஜிஓ காலனி கிணற்றில் பெண் சடலம் மீட்பு

Updated On :10 மார்ச் 2024, 2:30 am

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள கிணற்றில் பெண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா். என்ஜிஓ காலனி உதயா நகா் பகுதியில் உள்ள கிணற்றில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக பெருமாள்புரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாரும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சடலமாகக் கிடந்தவா் ஐயப்பன் நகரைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி காஞ்சனா (52) என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகிறாா்கள். தொட்டியில் பெண் சடலம்: பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சோ்ந்தவா் பிரேம்குமாா். இவரின் மனைவி எலிசபெத் ராணி (59). இவருக்கு உடல்நிலை சரியில்லையாம். வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) வீட்டிலிருந்து வெளியே சென்ற அவரை காணவில்லையாம். இந்த நிலையில், அவரின் வீட்டின் குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் எலிசபெத் ராணியின் சடலம் கிடந்ததாம். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.