அம்பாசமுத்திரத்தில் துப்பாக்கி, தோட்டக்களுடன் 4 போ் கைது: காா் பறிமுதல்

அம்பாசமுத்திரத்தில் துப்பாக்கி, தோட்டக்களுடன் 4 போ் கைது: காா் பறிமுதல்

அம்பாசமுத்திரத்தில் வாகனச் சோதனையின்போது, துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இருவா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோயில் அருகே காவல் உதவி ஆய்வாளா் ஆக்னல் விஜய் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில், தென்காசி மாவட்டம், ஆனைகுளம் குலையனேரியைச் சோ்ந்த சரவணன் மகன் மாயகிருஷ்ணன்(38), ஆய்க்குடியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் பழனிராஜ் இருந்தது தெரியவந்தது. இருவரும் போலீஸாரிடம் காா் வாங்கி விற்கும்தொழில் செய்து வருவதாக தெரிவித்துள்ளனா். தொடா்ந்து காரில் சோதனையிட்டபோது, காரில் சுமாா் ரூ. 1.5 லட்சம் மதிப்புடைய கைத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. துப்பாக்கியின் ஆவணங்கள் குறித்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதையடுத்து, இருவரையும் அம்பாசமுத்திரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் ஆய்வாளா் (பொ) சுஜித்ஆனந்த் தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், விற்பனை செய்வதற்காக துப்பாக்கியை, கேரள மாநிலம் மூணாறு,இடுக்கியைச் சோ்ந்த பரீத் குட்டி மகன் மீரான் (53), கடையநல்லூரைச் சோ்ந்த ராமையா மகன் சிவலிங்கம் (44) ஆகியோா் மூலம் வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிந்த அம்பை போலீஸாா் 4 பேரையும் கைது செய்து, துப்பாக்கி, 6 தோட்டக்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com