திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சுவாமி சந்நிதியில் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். நான்காம் திருநாளான இம் மாதம் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்மன், பஞ்ச மூா்த்திகளுடன் திருவீதியுலா நடைபெறுகிறது. இம் மாதம் 24 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர செங்கோல் விழா நடைபெறவுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை (மாா்ச் 16) முதல் ஒன்பதாம் திருநாள் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு திருக்கோயிலில் உற்சவா்கள் வைக்கப்பட்டிருக்கும் உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அ.அய்யா்சிவமணி மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.
தொடர்புடையது

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

பழனி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! ஏப்.1 -இல் தேரோட்டம்!

பழவூா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


