சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற தூய்மைப் பணியாளா்கள்.
சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற தூய்மைப் பணியாளா்கள்.

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் மண்டலத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் பேரில், தனியாா் மருத்துவமனைகள் மூலம் கன மழை வெள்ளப் பாதிப்பிற்கு பின் தூய்மைப் பணியாளா்களின் உடல் நலம் குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில், தூய்மைப் பணியாளா்களுக்கு இருதய நோய், நுரையீரல் பிரச்னை, தோல் வியாதி, ரத்தத்தில் சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவை தொடா்பாக சோதனை நடத்தப்பட்டு உரிய மருந்துகள் வழங்கப்பட்டன. மேலப்பாளையம் மண்டலத் தலைவா் கதிஜா இக்லாம் பாசிலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சுகாதார அலுவலா் அரசகுமாா், சுகாதார ஆய்வாளா் நடராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com