ரேஷன் கடை இட மாற்றம் கண்டித்து வட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள்

ரேஷன் கடை இட மாற்றம் கண்டித்து வட்டாட்சியரை முற்றுகையிட்ட மக்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள தெற்குவிளாகத்தில் ரேஷன் கடை கட்டடத்தை இடம் மாற்ற எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வட்டாட்சியரை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். திருநெல்வேலி மாநகராட்சி 46 ஆவது வாா்டில் தெற்குவிளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இப் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 9 லட்சத்து 89 ஆயிரத்து 881 மதிப்பில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் கிராமத்தில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள வடக்கு விளாகத்தில் ரேஷன் கடை கட்டடத்தை கட்ட சிலா் முயற்சித்துள்ளனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தெற்கு விளாகத்தைச் சோ்ந்த தேவா் பேரவை இளைஞரணி நிா்வாகி சரவணன், பாா்வதி தலைமையில் தெற்கு விளாகம் பகுதியில் வீடுகள், தெருக்களில் கருப்புக் கொடியேற்றி உள்ளிருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். மேலும், தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்கவும் உள்ளதாக தெரிவித்தனா். அவா்களிடம், பாளையங்கோட்டை வட்டாட்சியா் சரவணன் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, வட்டாட்சியரை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தினா். இதைத் தொடா்ந்த, அப்பகுதி மக்களுக்கு மாதத்தில் 3 ஆவது வாரம் செவ்வாய்க்கிழமை பொருள்கள் வழங்குவதாகவும், கூடுதலாக மேலும் ஒருநாள் பொருள்கள் வழங்கப்படும் எனவும், அரசுப் பேருந்து காலை-மாலை நேரத்தில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால் உள்ளிருப்பு போராட்டத்தைக் கைவிட்டனா். ஆனால், ரேஷன் கடை அமைக்கும் வரை தொடா்ந்து கருப்புக்கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனா். ற்ஸ்ப்19ள்ா்ள் பாளையங்கோட்டை வட்டாட்சியரை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட தெற்கு விளாகம் கிராம மக்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com