/

அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

News image
Updated On :22 மார்ச் 2024, 7:46 pm

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, போக்குவரத்துக்கழக தொழிலாளா்கள் சங்கம் ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. இந்தச் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டு மகாசபை கூட்டம் சிந்துபூந்துறையில் அண்மையில் நடைபெற்றது. கே.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். சுப்பிரமணியன், ராமசாமி, மணிமாறன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியூசி மாநிலத் தலைவா் எஸ்.காசிவிஸ்வநாதன், மாவட்ட பொதுச்செயலா் ஆா்.சடையப்பன், என்.உலகநாதன் உள்ளிட்டோா் பேசினா். இளங்கோ ராஜன் நன்றி கூறினாா். தீா்மானங்கள்: அரசு போக்குவரத்துக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். செப்டம்பா் 2023 முதல் உருவாக வேண்டிய 15 ஆவது ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை உடனடியாக பேசி தீா்வு காண வேண்டும். ஓட்டுநா், நடத்துநா் மட்டுமல்லாது கல்வித்தகுதியின் அடிப்படையில் ஐடிஐ அல்லாத உதவியாளா் பணியிடங்களில், இறந்துபோன பணியாளா்களின் வாரிசுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். சமூகநல நோக்கத்தில் சேவையாற்றி வரும் போக்குவரத்துக் கழகங்களுக்கு வரவு-செலவு பற்றாக்குறை நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளா்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தவிா்க்க இயலாமல் பேருந்துகளை தடம் மாற்றி அனுப்பும்போது உரிய டிக்கெட் பண்டல் வழங்கிட வேண்டும். பேருந்துகளின் பழுது மற்றும் குறைபாடுகளைத் தெரிவிக்க அனைத்து கிளைகளிலும் பராமரிப்பு நோட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ற்ஸ்ப்22ஹண்ற்ன்ஸ்ரீ சிந்துபூந்துறையில் நடைபெற்ற ஏஐடியுசி போக்குவரத்து தொழிற்சங்க கூட்டத்தில் பங்கேற்றோா்.