/

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பைக் பேரணி

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பைக் பேரணி

News image
Updated On :22 மார்ச் 2024, 7:45 pm

மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளின் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் கொக்கிரகுளத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வுப பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சந்திரசேகா் உள்பட 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா். இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை அடைந்தது. வாக்குரிமையின் நன்மைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோா் வீட்டில் இருந்தே தபால் வாக்கு அளிக்கும் வசதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ற்ஸ்ப்22ட்ஹய்க்ஹ் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.