ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கடையத்தில் வனத் தீத்தடுப்பு முகாம்

கடையத்தில் வனத் தீத்தடுப்பு முகாம்

News image
Updated On :22 மார்ச் 2024, 4:14 pm

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச் சரக அலுவலகத்தில் வனத் தீத்தடுப்பு முகாம் நடைபெற்றது. ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அதிகாரி விஜயன் பங்கேற்று, வனப் பகுதியில் ஏற்படும் தீவிபத்து, வீடுகளில் எரிவாயு உருளைகளில் கசிவால் ஏற்படும் தீவிபத்தின்போது தீயணைக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கமளித்தாா். தொடா்ந்து, விபத்துக் காலத்தில் முதலுதவி செய்யும் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா, வனச் சரகா்கள் கடையம் கருணாமூா்த்தி, அம்பாசமுத்திரம் நித்யா, முண்டந்துறை கல்யாணி, வனவா்கள், வனக் காப்பாளா்கள், வனக் காவலா்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்கள், கடையம் வட்டார விவசாயிகள் பங்கேற்றனா்.