மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருநெல்வேலி மாநகர காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம்

திருநெல்வேலி மாநகர காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம்

News image
Updated On :23 மார்ச் 2024, 6:32 pm

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சொக்கிலிங்ககுமாா், கவிப்பாண்டியன், பரணி எம். இசக்கி, உதயகுமாா், சொ்ணம், மாரியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா்கள் ராமகிருஷ்ணன், வனராஜன், பொதுச் செயலா்கள் கிருஷ்ணன், அருள்தாஸ், செல்லப்பாண்டியன், வட்டாரத் தலைவா்கள் பாக்கியகுமாா், அலெக்ஸ், மண்டலத் தலைவா்கள் கெங்கராஜ், ரசூல் மைதீன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தீா்மானங்கள் : இந்தியா கூட்டணியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸூக்கு ஒதுக்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவா் மற்றும் தமிழக இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவா் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றிக்கு பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.