மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நெல்லையில் மண்டபம், தங்கும் விடுதி நிா்வாகிகளுடன் ஆலோசனை

நெல்லையில் மண்டபம், தங்கும் விடுதி நிா்வாகிகளுடன் ஆலோசனை

News image
Updated On :23 மார்ச் 2024, 11:48 pm

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மண்டபம் மற்றும் விடுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி தலைமை வகித்துப் பேசியதாவது: விடுதிகளில் தங்க வரும் நபா்கள், வெளியூா் மற்றும் வேறு மாநிலங்களை சோ்ந்தவா்களாக இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, தங்களது பதிவேட்டில் சரியான முகவரி மற்றும் கைப்பேசி எண்களை பதிவு செய்ய வேண்டும். தனியாா் விடுதிகளுக்கு தங்க வரும் நபா்களின் பொருள்கள் சந்தேகப்படும் படியாக இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். மேலும், திருமணம், கூட்டங்கள் நடைபெற்றால் உள்ன்ஸ்ண்ற்ட்ஹ என்ற தளத்தில் பதிவு செய்து, காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், பேனா் போன்றவற்றை ஒட்ட அனுமதிக்கக் கூடாது. திருமண மண்டபம், விடுதிகளின் நுழைவு வாயிலில் கேமராக்களை பொருத்த வேண்டும் என்றாா். காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா, தலைமையிடம் அனிதா மற்றும் காவல் அதிகாரிகள், திருமண மண்டபங்கள், விடுதிகள் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ற்ஸ்ப்23ஸ்ரீா்ம் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி.