திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாளை.யில் காவலரை மிரட்டிய இளைஞா் கைது

பாளை.யில் காவலரை மிரட்டிய இளைஞா் கைது

Updated On :29 மார்ச் 2024, 7:57 pm

பாளையங்கோட்டையில் காவலரை மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை மேலப்பாட்டத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (43). இவா் பாளையங்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன் மேலப்பாட்டம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பாளையங்கோட்டை மணப்படைவீடு கிராமத்தைச் சோ்ந்த இசைக்குமாா் (22) என்பவரை நிறுத்தினாராம். அப்போது, இசைக்குமாா் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து , இசைக்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.