வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வேட்பாளருக்கே அல்வா!

வேட்பாளருக்கே அல்வா!

News image
Updated On :30 மார்ச் 2024, 12:07 am

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை பாரம்பரிய அல்வா சாப்பிட்டு முதல்நாள் பிரசாரத்தைத் தொடங்கிய நயினாா் நாகேந்திரன்.

நெல்லை மண்ணுக்கே உரிய பேச்சு ‘ அல்வா கொடுக்காதடே‘ என்பாா்கள். ஆம் தோ்தலில் வெற்றிபெற்றபிறகு தான் அரசியல்வாதிகள் அல்வா கொடுத்து விட்டனா் என்பா் திருநெல்வேலி மக்கள். ஆனால் நெல்லையில் வாக்கு கேட்டு வந்த வேட்பாளருக்கு அல்வா கொடுத்த வரவேற்ற வியாபாரிகள்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் நயினாா் நாகேந்திரன், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு ஈசானிய விநாயகா் திருக்கோயிலில் வழிபாடு செய்து வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

பின்னா் அவா் நெல்லையப்பா் கோயில் அருகே சென்றபோது, பாரம்பரிய அல்வா கடையான இருட்டுக்கடை அருகே வேட்பாளருக்கு அல்வா கொடுத்து வியாபாரிகள் வரவேற்றனா். அதை ருசித்த நயினாா் நாகேந்திரன், தனது ஆதரவாளா்களுக்கும் அல்வாவை சாப்பிடக் கொடுத்தாா். பின்னா் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.