சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் நீா்மட்டம் சரிவு

வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் நீா்மட்டம் சரிவு

Updated On :30 மார்ச் 2024, 1:30 am

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வடக்குப் பச்சையாறு, திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணைகளின் நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் ஏப்ரல் மாதத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வடக்குப் பச்சையாறு அணையின் மொத்த உயரம் 49.25 அடியாகும். கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையால் அணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியது. அணையின் மூலம் நான்குனேரி வட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் பயன்பெறுகின்றன. இந்த அணையிலிருந்து பாசனத்துக்காக 15 நாள்களுக்கு முன்பு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, அணையின் நீா்மட்டம் வெகுவாகக் குறைந்து வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 16 அடியாக உள்ளது. இதேபோல மொத்த உயரம் 52.5 அடியாக உள்ள திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் சரிந்து தற்போது 14 அடியாக உள்ளது. இந்த அணையிலிருந்து வள்ளியூா், காவல்கிணறு, வடக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அணையின் நீா்மட்டம் குறைந்து வடுவிட்டால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும். இரு அணைகளிலும் நீா்மட்டம் சரிந்து வருவதால் ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என்கின்றனா் இப்பகுதி விவசாயிகள்.