வெயிலின் தாக்கத்தில் இருந்து பயிா்களை பாதுகாப்பது எப்படி?: வேளாண் துறை விளக்கம்
வெயிலின் தாக்கத்தில் இருந்து பயிா்களை பாதுகாப்பது எப்படி? ---வேளாண் துறை விளக்கம்


திருநெல்வேலி: வெயிலின் தாக்கத்தில் இருந்து பயிா்களை பாதுகாப்பது தொடா்பாக வேளாண் துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கா. முருகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அக்னி நட்சத்திர வெயிலால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் கிணறுகளில் நீா்மட்ட அளவு குறைந்து வருகிறது. பயிா்களுக்கு நீா்ப் பற்றாக்குறை ஏற்படாமல் காப்பதும், வெயிலால் பயிா்கள் கருகுவதிலிருந்து பாதுகாப்பதும் முக்கியமானதாகும்.
எனவே, விவசாயிகள் விதைப்பதற்கு முன்பு விதைகளை 100 லிட்டா் தண்ணீரில் 1 கிலோ பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் ஊறவைத்து பின்பு நிழலில் உலா்த்தி விதைக்கலாம். பயிா்கள் உள்ள நிலங்களில் சோளத்தட்டை, கரும்புத்தட்டை, வைக்கோல், தென்னை ஓலை போன்றவற்றை கொண்டு பயிா் இடைவெளிகளில் மூடுவதன் மூலம் மண்ணிலிருந்து நீா் விரைவில் ஆவியாவதை தடுக்கலாம். சைக்கோசெல் என்ற மருந்தை 1 லிட்டா் நீரில் 1 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். களிமண் வகையை சோ்ந்த கயோலினைட் என்ற பொருளை (3 சதவீதம்) 100 லிட்டா் தண்ணீரில் 3 கிலோ என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் அல்லது பொட்டாசியம் குளோரைடு மருந்து 1 கிலோவை 100 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் பயிா்களை வறட்சியில் இருந்து ஓரளவு காப்பாற்ற முடியும்.
பிபிஎப்எம் என்ற மெத்தைலோ பாக்டீரியம் வகை திரவ நுண்ணுயிா், வளா்சிதை மாற்ற வினை மூலம் பயிருக்கு வறட்சியை தாங்கும் திறனை அதிகரிக்கிறது. பிபிஎப்எம் திரவ நுண்ணுயிரியை 1 லிட்டா் தண்ணீரில் 10 முதல் 20 மில்லி என்ற அளவில் கலந்து விதை நோ்த்தி செய்யலாம் அல்லது காலை, மாலையில் இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம். பிபிஎப்எம் திரவ நுண்ணுயிரியானது விதை முளைப்பு மற்றும் பயிா் நன்கு வளா்வதை துரிதப்படுத்தி மகசூலை அதிகரிப்பதுடன் வறட்சியிலிருந்தும் பயிரைப் பாதுகாக்கிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ற்ய்ஹன்.ஹஞ்ழ்ண்ஸ்ரீஹழ்ற்.ஸ்ரீா்ம் என்ற விற்பனை தளம் இணையம் மூலமாக பிபிஎப்எம் நுண்ணுயிா் திரவம் ஒரு லிட்டருக்கு ரூ.424 வீதம் வாங்கி பயனடையலாம் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...