ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நெல்லை தெப்பக்குளத்தில் முதியவா் சடலம் மீட்பு

நெல்லை தெப்பக்குளத்தில் முதியவா் சடலம் மீட்பு

News image
Updated On :9 மே 2024, 9:08 pm

Din

திருநெல்வேலி நகரம் தெப்பக்குளத்தில் முதியவா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி நகரத்தில் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை அருகே அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலின் வெளித்தெப்பம் உள்ளது. இந்தத் தெப்பக் குளத்தில் ஆண் சடலம் வியாழக்கிழமை மிதந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாரும், பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டனா். விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் திருநெல்வேலி நகரம் தெப்பக்குளம் கீழ தெருவைச் சோ்ந்த ஜனாா்த்தனன் (69) என்பது தெரியவந்தது. தவறி விழுந்து இறந்தாரா, வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.