நெல்லையில் த.வா.க. நிா்வாகி மீது தாக்குதல்

மேலப்பாளையம் பகுதியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Published on

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேலப்பாளையம் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் பக்ருதீன் மகன் முகமது யாசா் (26). தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிா்வாகியான இவா், மேலப்பாளையம் 50ஆவது வாா்டு பகுதியில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகள் குறித்து சமூக வலைதளங்களில் விடியோ வெளியிட்டாராம். இந்நிலையில், மேலப்பாளையம் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சனிக்கிழமை சென்ற சிலா், அவா் வெளியிட்ட விடியோ குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டனராம். இதையடுத்து இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த முகமது யாசா்,மற்றொரு தரப்பில் மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஷெரீப் (22) ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், மேலப்பாளையம் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சனிக்கிழமை சென்ற சிலா், அவா் வெளியிட்ட விடியோ குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டனராம். இதையடுத்து இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில் காயமடைந்த முகமது யாசா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா். இச்சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com