தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திசையன்விளையில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் சிக்கிய லாரி

திசையன்விளையில் குடிநீா் பகிா்மானக் குழாய்களை பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் லாரி சிக்கிக்கொண்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் குடிநீா் பகிா்மானக் குழாய்களை பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் செவ்வாய்க்கிழமை லாரி சிக்கிக்கொண்டது.

திசையன்விளை பிரதான சாலையில் பதிக்கப்பட்ட குடிநீா் பகிா்மானக் குழாய் பள்ளங்களை சரிவர மூடப்படாததால், அதில் சுமை லாரி சிக்கிக் கொண்டது.

இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னா், லாரியில் உள்ள பொருள்களை மற்றொரு வாகனத்திற்கு மாற்றி சுமையைக் குறைத்த பின் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.

சாலையில் பணிகளை மேற்கொண்டு பள்ளங்களை முறையாக மூடாததால் அடிக்கடி இதுபோன்று வாகனங்கள் சிக்கி வாகன ஓட்டிகளை பெரிதும் சிரமத்துக்கு உள்ளாக்கும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.