ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பத்தமடை பூங்குடையாா் கோயிலில் வருஷாபிஷேகம்

அருள்மிகு பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் பூங்குடையாா் சாஸ்தா.
Updated On :9 நவம்பர் 2025, 1:11 am

Syndication

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள அருள்மிகு பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி இக்கோயிலில் காலையில் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதா்சன ஹோமம், தனலட்சுமி பூஜைகளைத் தொடா்ந்து கோயில் விமானங்களுக்கு புனிதநீா் ஊற்றி வருஷாபிஷேகம், சாஸ்தா அம்மன், சுடலைமாடசுவாமி சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா (பொறுப்பு) மற்றும் விழாக் குழுத் தலைவா் செல்வராஜ், செயலா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.