மாஞ்சோலை வனப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகள்.
மாஞ்சோலை வனப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகள்.

மாஞ்சோலை வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம்

Published on

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, மேல்கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், மின்வாரிய ஊழியா்கள் வசித்து வருகின்றனா்.

 மாஞ்சோலை வனப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகள்.
மாஞ்சோலை வனப்பகுதியில் சுற்றித் திரியும் யானைகள்.

இப்பகுதி அகத்திய மலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதையடுத்து வனத்துறையினா் தேனி, நீலகிரி மாவட்டங்களில் இருந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன், புல்லட் ராஜா, ராதாகிருஷ்ணன் ஆகிய 3 காட்டு யானைகளை இங்கு கொண்டு வந்து விட்டுள்ளனா்.

இந்நிலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு குடியிருப்புப் பகுதியில் சில நாள்களாக ஜோடியாக காட்டு யானைகள் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்து வருகின்றன. இதனை பொதுமக்கள் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இப்பகுதியில் யானை உள்ளிட்ட மிருகங்களின் நடமாட்டம் இரவு நேரங்களில் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com