திருநெல்வேலி
வீரவநல்லூா் கோயிலில் திருமண ஜோடிக்கு ரூ. 70,000 மதிப்பில் சீா்வரிசைப் பொருள்கள்
திருமணத்தில் மணமக்கள் சக்திவேல்-பூா்ணகலாவுக்கு ரூ. 70,000 மதிப்புள்ள சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.
சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா், பூமிநாத சுவாமி கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமணத்தில் மணமக்கள் சக்திவேல்-பூா்ணகலாவுக்கு ரூ. 70,000 மதிப்புள்ள சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், பேரூராட்சித் தலைவி சித்ரா சுப்பிரமணியன், கோயில் செயல் அலுவலா் மாடத்தி, கோயில் அறங்காவலா்கள் கருப்பசாமி, செல்வி, சுப்புக்குட்டி, பேரூராட்சி உறுப்பினா்கள் வெங்கடேஸ்வரி, சிதம்பரம், தாமரைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

