பாளை.யில் மாணவிகளுக்கு தொல்லை: இளைஞா் கைது
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :11 நவம்பர் 2025, 6:39 pm

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மாலையில் பள்ளி மாணவிகள் பேருந்துக்காகக் காத்திருந்தனா். அப்போது அங்கு மதுபோதையில் வந்த இளைஞா் தொல்லை கொடுத்தாராம்.
பொதுமக்கள் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், பாளை. ரஹ்மத்நகா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (35) என்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...