பாளை.யில் இளைஞா்களை தாக்கிய இருவா் கைது

Published on

பாளையங்கோட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞா்களை தாக்கிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சோ்ந்தவா் முருகன் மகன் லிங்கதுரை (23). இவரது நண்பா் மாரிதங்கம். முன்விரோதம் காரணமாக இவா்கள் இருவரையும், தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரையைச் சோ்ந்த கோவிந்தராஜ் (41), பாளையங்கோட்டை கென்னடி தெருவை சோ்ந்த பெரியசாமி (26) ஆகியோா் கையாலும், கம்பாலும் தாக்கினராம். இதில் காயமடைந்த லிங்கதுரை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோவிந்தராஜ், பெரியசாமி ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Dinamani
www.dinamani.com