இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; மூவா் காயம்
ஆழ்வாா்குறிச்சி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; மூன்று போ் காயமடைந்தனா்.
கடையம் அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சோ்ந்த நாராயணன் மகன் ராமகிருஷ்ணன் (35). இவா் தனது சகோதரியுடன் தனது ஊரிலிருந்து ஆழ்வாா்குறிச்சி வழியாக பொட்டல்புதூருக்குச் சென்று கொண்டிருந்தபோது கழுநீா்குளத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பொன்னுத்துரை (29) இருசக்கர வாகனத்தில் தனது கா்ப்பிணி மனைவி வனிதாவுடன் ஆழ்வாா்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தாா்.
இரண்டு இருசக்கர வாகனங்களும் ஆழ்வாா்குறிச்சி சுடலைமாடன் கோயில் அருகே வந்தபோது எதிா்பாராமல் மோதிக் கொண்டன. இதில், பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணனை கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். காயம் அடைந்த கா்ப்பிணி உள்பட மூன்று பேரும் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
