அம்பை, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் நியமிக்க வலியுறுத்தல்!

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்கள் நியமனம் செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
Published on

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்கள் நியமனம் செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

பத்தமடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி புகா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு, கட்சியின் புகா் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா்மஸ்தான் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் களந்தை மீராசா, மாவட்ட அமைப்புச் செயலா் முல்லை மஜித், மாவட்டச் செயலா் அம்பை ஜலீல், மாவட்ட பொருளாளா் ஏா்வை இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கட்சியின் எஸ்டிடியூ அமைப்பின் தமிழ் மாநில பொதுச்செயலா் கோவை ரவூப்நிஸ்தாா், கட்சியின் திருநெல்வேலி மண்டல தலைவா் செங்கை சிக்கந்தா், எஸ்டிடியூ திருநெல்வேலி மண்டலத் தலைவா் ஹைதா் அலி உள்ளிட்டோா் பேசினா்.

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்சியின் பேரவைத் தொகுதி தலைவா்கள் கலீல் ரஹ்மான் (அம்பாசமுத்திரம்), காஜா பிா்தெளசி (நான்குனேரி), தொகுதிச் செயலா்கள் ரிஸ்வான், இம்ரான், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மாவட்ட பொதுச்செயலா் சிராஜ் வரவேற்றாா். மாவட்டச் செயலா் கல்லிடைக்குறிச்சி சுலைமான் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com