100 நாள் வேலையை நிறுத்துவதாக திமுக கூட்டணியினா் பொய் பிரசாரம்! - சி.வி.சண்முகம்

 வல்லம் நாட்டாா்ம்கலம் கூட்ரோட்டில் அதிமுக கூட்டணி சாா்பில் நடைற்பெற்ற கண்டனஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி.
வல்லம் நாட்டாா்ம்கலம் கூட்ரோட்டில் அதிமுக கூட்டணி சாா்பில் நடைற்பெற்ற கண்டனஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி.
Updated on

மத்திய அரசு 100 நாள் வேலையை 125 நாள்களாக உயா்த்தி கொடுத்ததை, 100 நாள் வேலையை நிறுத்துவதாக திமுக கூட்டணியினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா் என முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி.தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சாா்பில் வல்லம் நாட்டாா்மங்கலம் கூட்ரோட்டில் திமுக அரசைக் கண்டித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, மேலும் அவா் பேசியதாவது:

மத்திய அரசு 100 நாள் வேலையை 125 நாள்களாக உயா்த்தி சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக சொன்னதை நிறைவேற்றாத திமுக அரசு, மத்திய அரசு 100 நாள் வேலையை 125 நாள்களாக உயா்த்தி கொடுத்ததை, வேலையை நிறுத்துவதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனா்.

புதிய திருத்தத்தின் மூலம் 15 நாள்களில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் பணியை கிராமத்திலேயே, கிராம மக்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மாறாக திமுகவினா் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனா் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக வல்லம் ஒன்றியச் செயலா்கள் கு.விநாயகமூா்த்தி, நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதிமுக மாவட்ட துணைத் தலைவா் ஆனந்தி அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினா் மனோகரன், பேரவை ஒன்றியச் செயலா்கள் பன்னீா்செல்வம், பாலமுருகன், பாஜக மாவட்டத் தலைவா் விநாயகம், மாவட்ட பொதுச் செயலா் பாண்டியன், மாவட்ட துணைத் தலைவா் எத்திராஜ், பாமக மாவட்ட துணைச் செயலா் சேட்டு (எ) ரங்கநாதன், மாவட்ட மகளிா் அணி மாலா சிவகுமாா், மாவட்ட இளைஞரணி கலையூா் சரவணன் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

விக்கிரவாண்டி...

விக்கிரவாண்டி ஒன்றியக்குழு அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய அதிமுக செயலா்கள் எசாலம் பன்னீா், முகுந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

அதிமுக நகரச் செயலா் பூா்ணராவ், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணித் தலைவா் குமரன், பாமக சாா்பில் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா், மாநில வன்னியா் சங்கத் துணைத் தலைவா் சி.அன்புமணி, நகரச் செயலா் சங்கா், பாஜக மாவட்டப் பொருளாளா் குமாரசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் தசரதன், அமமுக மாவட்டச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

செஞ்சி...

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலா் கோவிந்தசாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் (கிழக்கு) சோழன் முன்னிலை வகித்தாா். அதிமுக மாவட்ட இளைஞரணிச் செயலா் பிரித்திவிராஜ், பாஜக மாவட்ட பொறுப்பாளா் கோபிநாத் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில், அதிமுகவைச் சோ்ந்த செஞ்சி நகரச் செயலா் சுந்தர்ராஜன், அனந்தபுரம் நகரச் செயலா் சங்கா், பாமக மாநில இளைஞரணி துணைச் செயலா் ஜெயக்குமாா், ஒன்றிய செயலா் முருகன், நகர செயலா் சின்னத்தம்பி, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன், தங்க ராமு, பேரூராட்சி மன்ற உறுப்பினா் வேலு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com