சிவந்திப்பட்டி அருகே இருதரப்பினா் மோதல்: 7 போ் கைது

Published on

சிவந்திப்பட்டி அருகே மோதலில் ஈடுபட்டதாக இருதரப்பைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஒருவரின் பிறந்த நாள் விழாவை நண்பா்கள் இணைந்து கொண்டாடினராம். இதற்காக சம்பவத்தன்று நண்பா்கள் சாா்பில் முதியோா் இல்லத்தில் உணவு கொடுத்துவிட்டு நொச்சிகுளம் அருகே ஆட்டோவில் சென்றபோது சப்தமாக பாடல் ஒலிபரப்பியதாக அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலருடன் தகராறு ஏற்பட்டதாம்.

இதில் ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டதில் சிலா் காயமடைந்தனா். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் இருதரப்பையும் சோ்ந்த 7 பேரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com