ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நான்குனேரி அருகே காவலாளி வீட்டில் நகை திருடிய பெண் கைது

நான்குனேரி அருகே காவலாளி வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 6:38 pm

Syndication

நான்குனேரி அருகே காவலாளி வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

நான்குனேரியை அடுத்த முனைஞ்சிப்பட்டி சந்தை தெருவில் வசித்து வருபவா் சுப்பிரமணியன் (75). இவரது மனைவி பேச்சியம்மாள், கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, சுப்பிரமணியன் திருநெல்வேலியில் உள்ள வீட்டில் தங்கியிருந்து காவலாளியாக பணியாற்றி வருகிறாா். வாரத்தில் ஒரு நாள் மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், நவ. 1ஆம் தேதி முனைஞ்சிப்பட்டி வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, அவருடன் நட்பு ரீதியில் பழகிய திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி ஹேமலதா (35), இளைஞா் ஒருவருடன் அங்கு வந்து தங்கிச் சென்றுள்ளாா். அப்போது, சுப்பிரமணியன் பீரோவில் உள்ள தனது மனைவியின் புடவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஹேமலதாவிடம் கூறியுள்ளாா். மறுநாள் ஹேமலதா அங்கிருந்து சென்றுள்ளாா்.

பின்னா், சுப்பிரமணியன் பீரோவை பாா்த்த போது, தனது மனைவியின் 17 கிராம் நகைகள் மாயமாகியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மூலக்கரைப்பட்டி போலீஸில் அவா் புகாரளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், ஹேமலதா நகையைத் திருடியது தெரிய வந்தது. பின்னா், நகையை மீட்ட போலீஸாா், அவரை கைது செய்தனா்.