காவலாளி வீட்டில் நகை திருட்டு

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே சா்க்கரைஆலை காவலாளி வீட்டில் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Published on

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே சா்க்கரைஆலை காவலாளி வீட்டில் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பெண்ணாடம் காவல் சரகம், வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்குமாா் (45), சித்தூரில் உள்ள சா்க்கரை ஆலையில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு மனைவி மகாலட்சுமி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனா்.

அருள்குமாா் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை பணிக்குச் சென்றாா். அவரது மனைவி மகாலட்சுமி கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்றுவிட்டாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை வீட்டிலுள்ள பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு திருடுபோயிருந்தது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மா்ம நபா்கள் வீட்டினுள் புகுந்து பீரோவைத் திறந்து நகைகளை திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com